நிகழ்விற்கு கணினி அறிவியல் துறை மாணவி சி. சுமித்ரா வரவேற்று பேசினார். கல்லூரி செயலாளர் காயத்ரி கோவிந்த் முன்னிலை வகித்தார். விழாவில் மருதம் நெல்லி கல்விக் குழும நிர்வாக இயக்குநர் செந்தில், தொப்பூர் ஜெயலட்சுமி பொறியியல் கல்லூரி முதல்வர் தமிழரசு, மருதம் நெல்லி பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் மகேந்திரன், ஜெயம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் பரஞ்சோதி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
முக்கிய நிகழ்வாக, மருதம் நெல்லி கல்விக் குழும தாளாளர் டாக்டர் கா. கோவிந்த் தலைமை வகித்து, வேலைவாய்ப்பு முகாமில் தேர்வான மாணவர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கி சிறப்புரையாற்றினார். அவர் பேசும்போது,
“இந்தியாவின் எதிர்காலம் இளைஞர்களை நம்பியே உள்ளது. மாணவர்கள் தங்கள் திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும். தொழில்நுட்பம் சார்ந்த அறிவைப் பெருக்கிக் கொண்டு, புதிய சிந்தனைகளை உருவாக்கி, போட்டி நிறைந்த உலகில் தங்களுக்கேற்ப ஓர் அடையாளத்தை ஏற்படுத்த வேண்டும்” எனத் தெரிவித்தார்.
இதையடுத்து முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்வும் நடந்தது. நிகழ்ச்சி முடிவில் தமிழ்த்துறை மாணவி நா. ஜாஸ்மின் நன்றி கூறினார். நிகழ்வில் பல மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் முன்னாள் மாணவர்களும் பங்கேற்று விழாவை சிறப்பித்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக