பாலக்கோடு, மே 13:
பாலக்கோடு பேரூராட்சிக்குட்பட்ட 17-ஆம் வார்டு, புதுப்பட்டாணியர் தெருவில் ரூ.35 இலட்சம் மதிப்பீட்டில் சாக்கடை கால்வாய் மற்றும் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணிக்கு பூமி பூஜை விழா 13 மே 2025 அன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பேரூராட்சி தலைவர் பி.கே. முரளி அவர்கள் பணியின் தொடக்கத்தைக் குறிக்கும் வகையில் பூமி பூஜை செய்து, வேலைகளை துவக்கி வைத்தார்.
இப்பணிகள், 15-வது நிதிக்குழு மானியம் மற்றும் பேரூராட்சி பொது நிதியின் கீழ் நிதியளிக்கப்பட்டு, புதுப்பட்டாணியர் தெரு உட்பட நான்கு தெருக்களில் மூடப்பட்ட வகையிலான கழிவுநீர் கால்வாய் மற்றும் பேவர் பிளாக் சாலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில் பேரூராட்சி செயல் அலுவலர் இந்துமதி, வார்டு கவுன்சிலர் வகாப்ஜான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும், கிளை செயலாளர் எல்.ஐ.சி. மோகன், முன்னாள் கிளை செயலாளர் முருகன், திமுக ஒன்றிய இளைஞர் அணி துணை அமைப்பாளர் சிவா, திமுக நிர்வாகிகள் சுரேஷ், இலியாஷ், துப்புரவு ஆய்வாளர் ரவீந்திரன், டி.கே.பி. கன்ஸ்ட்ரக்ஷன் ஒப்பந்ததாரர் தன்சீர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். பொதுமக்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு எதிர்பார்த்த இந்த பணிகள் துவக்கம் பெற்றதால் மகிழ்ச்சி வெளியிட்டுள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக