விழாவுக்கான தொடக்கம், பாலக்கோடு காவல் நிலையம் அருகே உள்ள முருகன் கோயிலில் வழிபாடுடன் ஆனது. பின்னர், ஸ்தூபி மைதானம், கடைவீதி, பேருந்து நிலையம் வழியாக தாசில்தார் அலுவலகம் வரை அமைதியான ஊர்வலமாக சென்று தொழிற்சங்க கொடிகளை ஏற்றி, இனிப்புகள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் செயலாளர்கள் இடும்பன், ராஜா, செல்வராஜ், ராஜீவேல், சண்முகம், பொருளாளர்கள் சண்முகம், சரவணன், முருகன், மாது, சக்திவேல் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டு ஒன்றுபட்ட கோஷங்களுடன் நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
விழா நிறைவில் தொழிற்சங்கத்தின் சார்பில் பொதுமக்கள் உள்ளிட்ட அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது. உழைக்கும் மக்களின் பணியை போற்றும் உணர்வோடு நடைபெற்ற இந்த நிகழ்வு, சமூக ஒற்றுமைக்கும், தொழிலாளர் உரிமைக்கும் ஒரு உயிரூட்டும் வழிகாட்டியாக அமைந்தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக