தருமபுரி மாவட்டம் பாலக்கோடு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக 40 டிகிரி செல்சியஸ் வரை கடும் வெப்பத்தால் மக்கள் கடும் அவலமடைந்திருந்தனர். பகலிலும் இரவிலும் வெப்பம் தணியாமல், மக்களுக்கு தூக்கமின்றி தவிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
இந்த நிலையில், இன்று (மே 1) மதியம் சுமார் 2 மணி நேரம் நீடித்த கனமழை, பாலக்கோடு, கடமடை, வாழைத்தோட்டம், என்டபட்டி, காவாப்பட்டி, சித்திரப்பட்டி, சிக்கார்தனஅள்ளி ஆகிய பகுதிகளில் வெளுத்து வாங்கியது. நீண்ட நாட்களுக்குப் பிறகு பெய்த இந்த மழை, வெப்பத்தில் வாடிய நிலத்தையும், மக்களையும் வாட்டியது, இந்நிலையில் அக்னி நட்சத்திரம் தொடங்க உள்ள இந்த சூழ்நிலையில், திடீரென வந்த இந்த மழை, இயற்கையின் அருளாகவே பொதுமக்கள் கருதினர். பசுமை காணாமல் இருந்த நிலங்கள் மீண்டும் உயிர் பெறும் அறிகுறியாக இந்த மழையை மக்கள் வரவேற்றனர். விவசாயிகளும் இதனால் நம்பிக்கையுடன் மகிழ்ச்சியடைந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக