தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு ஒன்றியம் எர்ரணஹள்ளி ஊராட்சியில் மே தினத்தையொட்டி சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் ஊராட்சி மன்ற செயலாளர் சண்முகம் வரவு செலவு கணக்குகள் மற்றும் பஞ்சாயத்து திட்ட பணிகளை வாசித்து அறிமுகப்படுத்தினார்.
அதனைத் தொடர்ந்து நடைபெற்ற விவாதங்களில், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் ஊராட்சி எல்லைக்குள் பயன்படுத்தப்படக்கூடாது என பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. மேலும், வீடுகளிலிருந்து வழங்கப்படும் குப்பைகளை மக்கும், மக்காத குப்பை என வகைப்படுத்தி வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
கோடை பருவம் என்பதால் ஒகேனக்கல் குடிநீரை சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும் என்பது குறித்து அதிகாரிகள் முக்கிய தீர்மானத்தை நிறைவேற்றினர். அத்துடன், ஊரின் சுகாதார நிலையை மேம்படுத்தும் நடவடிக்கைகள் அவசியம் என தெரிவிக்கப்பட்டது. மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள், ஊர் பொதுமக்கள், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர்கள் உள்ளிட்ட பலர் இதில் பங்கேற்று கிராம நிர்வாக பணிகளுக்கான ஆலோசனைகளில் பங்களித்தனர்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பும், குடிநீர் சேமிப்பும், தூய்மையும் முக்கியம் என்பதைக் குறிக்கும் விதமாக இந்த கிராமசபை கூட்டம் நடைபெற்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக