பாலக்கோடு, மே 16 –
வீட்டுவிடுமுறைக்காக மண்டுகொட்டாய்க்கு வந்திருந்த அவர், கடந்த 14ஆம் தேதி விவசாய பயன்பாட்டுக்காக வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தை தவறுதலாக உட்கொண்டதாக கூறப்படுகிறது. உடல்நலக் குறைபாடுடன் இருந்த மாணவனை, அவரது குடும்பத்தினர் உடனடியாக பாலக்கோடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட நிலையில், மே 16ஆம் தேதி அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இது குறித்து தகவலறிந்த பாலக்கோடு போலீசார், மாணவனின் உடலை மீட்டு, தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி உள்ளனர். மேலும், சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
👉 குறிப்பு:
தற்கொலை ஒரு தீர்வு அல்ல. மன அழுத்தம், தேர்வுத் தோல்வி, மற்றும் வாழ்க்கை சிரமங்களால் பாதிக்கப்படுகிறீர்களா? தயங்காமல் ஆலோசனை பெறுங்கள். உங்கள் வாழ்க்கை அருமையானது, உதவி எப்போதும் கிடைக்கும்.
📞 மாநில உளவியல் ஆலோசனை மையம் –
மனநலம் மற்றும் ஆலோசனை உதவி எண்: 104 (தமிழ்நாடு அரசு ஹெல்ப்லைன்)
Snehi (தன்னார்வ அமைப்பு): 91-9582208181
iCall (TISS): +91-9152987821
(தினமும் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக