Type Here to Get Search Results !

பேளாரஅள்ளி கிராமத்தில் தேர்வு முடிவுக்குப் பின்னர் மாணவி உயிரிழப்பு.



பாலக்கோடு, மே 17

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள பேளாரஅள்ளி கிராமத்தைச் சேர்ந்த கட்டிட வேலை தொழிலாளி முருகேசனுக்கு இரண்டு மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். அவரது இளைய மகள் காசிகா (15), அருகிலுள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து, சமீபத்தில் தேர்வுகளை எழுதினார். நேற்று வெளியான பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவில், கணிதப் பாடத்தில் அவர் தேர்ச்சி பெறவில்லை என கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த நிலையில் இருந்த மாணவி, வீட்டின் அருகிலுள்ள மாட்டு தொழுவத்தில் உயிரை மாய்த்துக்கொள்ள  முயன்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தகவலறிந்த பாலக்கோடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


👉 குறிப்பு:
தற்கொலை ஒரு தீர்வு அல்ல. மன அழுத்தம், தேர்வுத் தோல்வி, மற்றும் வாழ்க்கை சிரமங்களால் பாதிக்கப்படுகிறீர்களா? தயங்காமல் ஆலோசனை பெறுங்கள். உங்கள் வாழ்க்கை அருமையானது, உதவி எப்போதும் கிடைக்கும்.

📞 மாநில உளவியல் ஆலோசனை மையம்
மனநலம் மற்றும் ஆலோசனை உதவி எண்: 104 (தமிழ்நாடு அரசு ஹெல்ப்லைன்)
Snehi (தன்னார்வ அமைப்பு): 91-9582208181
iCall (TISS): +91-9152987821

(தினமும் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை) 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies