பாலக்கோடு அரசு கலைக் கல்லூரியில் சேர்க்கை தொடக்கம் – மாணவர்களுக்கு அரசுத் திட்ட உதவிகள் காத்திருக்கின்றன! - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 16 மே, 2025

பாலக்கோடு அரசு கலைக் கல்லூரியில் சேர்க்கை தொடக்கம் – மாணவர்களுக்கு அரசுத் திட்ட உதவிகள் காத்திருக்கின்றன!


பாலக்கோடு, மே 16:

தருமபுரி மாவட்டம், பாலக்கோட்டில் இயங்கிவரும் பாரத ரத்னா புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2025-26 கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை செயல்முறை தொடங்கியுள்ளது. இளங்கலை படிப்புகளுக்கான பல்வேறு பாடப்பிரிவுகள் இக்கல்லூரியில் காத்திருக்கின்றன. சுழற்சி – 1 மற்றும் சுழற்சி – 2 என்ற இரு பிரிவுகளில் உள்ள பாடப்பிரிவுகள் கீழே குறிப்பிடப்படுகின்றன:


சுழற்சி – 1 பாடப்பிரிவுகள்:

தமிழ், ஆங்கிலம், பெருளியல், வரலாறு, பொது நிர்வாகம், இளவணிகவியல், இள வணிக நிர்வாகவியல், சமூகப் பணி, கணிதவியல், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், கணிணி அறிவியல், புள்ளியியல், மின்னணு மற்றும் தொடர்பியல், ஊட்டச்சத்து மற்றும் உணவுக்கட்டுப்பாடு, நுண்ணுயிரியல், உளவியல்.


சுழற்சி – 2 பாடப்பிரிவுகள்:

கணிணி பயன்பாட்டியல், இளவணிகவியல், இளவணிக நிர்வாகவியல், வரலாறு, இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல். 12ஆம் வகுப்பை முடித்த மாணவ, மாணவியர்கள் தங்களுக்கான விருப்பப் பாடப்பிரிவுகளை தேர்ந்தெடுத்து பயன் பெறலாம். சேர்க்கை செயல்முறை முழுமையாக ஆன்லைனில் நடைபெறும் என்பது சிறப்பு. மாணவர்கள் www.tngasa.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து, அருகிலுள்ள இ-சேவை மையம் மூலம் நிர்வாக உதவியுடன் பதிவு செய்யலாம்.


இக்கல்லூரி மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசின் "தமிழ்புதல்வன்", "புதுமைப்பெண்", "நான் முதல்வன்" போன்ற பல்வேறு கல்வி உதவித் திட்டங்களின் பயன்கள் வழங்கப்படும். மாணவர்கள் மற்றும் பெற்றோருக்காக சேர்க்கை உதவி மையம் கல்லூரியில் இயங்கி வருகிறது. மேலும், மாணவர்கள் இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ள கல்லூரி முதல்வர் முனைவர் தீர்த்தலிங்கம் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

கருத்துகள் இல்லை:

Post Top Ad