மூதாட்டி ஒருவர், "எங்கள் ஊரில் குடிநீர் கிடைக்கவில்லை. எனது முதியோர் உதவித் தொகையை வைத்து தண்ணீர் வாங்கி குடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது," என்று வேதனையுடன் தெரிவித்தார். பெண்கள் மற்றும் குழந்தைகள் தண்ணீருக்காக காவேரி ஆற்றை நோக்கி சென்று தண்ணீர் எடுத்து வருகின்றனர்.
இந்த பிரச்சனை குறித்து பலமுறை புகார்கள் அளித்தும், பஞ்சாயத்து நிர்வாகம் இதைத் தீர்க்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். "இந்த நிலை எப்போது மாறும்?" என்று மக்கள் புலம்புகின்றனர்.
பொதுமக்கள், அரசு மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து, குடிநீர் பிரச்சனையை தீர்க்க வேண்டுமெனக் கோருகின்றனர். அரசு துறைகள் இந்த பிரச்சனையை விரைவில் கவனித்து, பொதுமக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக