தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (07.05.2025) நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில், தமிழக அரசின் “மீண்டும் மஞ்சப்பை” திட்டத்தின் முக்கியத்துவம் வலியுறுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், பேளராஅள்ளி அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் திருமதி கலாவதி அவர்கள், பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைத்து, இயற்கை பொருட்களால் தயாரிக்கப்பட்ட மாற்று தயாரிப்புகளைப் பயன்படுத்தும் அவசியத்தை எடுத்துரைத்தார்.
இந்த துணி அணையாடை, மூங்கில் குவளை, வாழை மட்டை கப், பிளாஸ்டிக் இழை மற்றும் நூலிழை இணைந்து உருவான பனியன்களை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்களுக்கு காண்பித்து, அவரிடமிருந்து பாராட்டைப் பெற்றார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருமதி ஐ. ஜோதிசந்திரா, தருமபுரி மாசுகட்டுப்பாட்டு வாரியத்தலைவர் திரு. உதயகுமார், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) திரு. நிர்மல்ரவி, நகர்நல அலுவலர் திருமதி லட்சியவர்ணா ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சி, பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைத்து, சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சியாகும். இயற்கை பொருட்களைப் பயன்படுத்துவதன் மூலம், சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்புகளை குறைத்து, பசுமை இந்தியா நோக்கில் ஒரு முக்கியமான படியாகும்.