
பாலக்கோடு, மே 21-
அடர்ந்த வனத்தை ஒட்டி அமைந்துள்ள இந்த கிராமத்தில், உணவு மற்றும் தண்ணீர் தேடி வனவிலங்குகள் அடிக்கடி ஊருக்குள் புகுந்து கால்நடைகளுக்கு தாக்குதல் நடத்தும் சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன. சமீபத்தில், இரவு நேரத்தில் சிறுத்தை ஒன்று விவசாயி விநாயகம் (50) என்பவரின் வீட்டின் முன்பு இருந்த கோழியை கவ்விச் சென்று வனப்பகுதிக்குத் திரும்பியது.
இந்த சம்பவம் வீடியோவில் பதிவாகி தற்போது பரவலாக பகிரப்பட்டு வருகின்றது. இதனால் அப்பகுதி மக்கள் இரவு நேரங்களில் வீட்டுக்கு வெளியே செல்லவே அச்சப்படுகிறார்கள். கடந்த பிப்ரவரியிலும் இதே வீட்டில் காவல்காக வைத்திருந்த நாயை சிறுத்தை கவ்விச் சென்ற சம்பவம் இடம்பெற்றிருந்தது.
மீண்டும் இப்படியான சம்பவங்கள் நடைபெறாத வகையில், சிறுத்தையை விரைந்து பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வனத்துறையினருக்கு பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக