தர்மபுரி மற்றும் நல்லம்பள்ளியில் ஜமாபந்தி முகாம்கள் நடைபெற்றது. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 20 மே, 2025

தர்மபுரி மற்றும் நல்லம்பள்ளியில் ஜமாபந்தி முகாம்கள் நடைபெற்றது.



தருமபுரி, மே 19-

தர்மபுரி மாவட்டத்தில் இன்று (மே 20, செவ்வாய்க்கிழமை) மதியம் 2 மணியளவில், ஜமாபந்தி முகாம்கள் பல்வேறு இடங்களில் நடைபெற்றன. தர்மபுரி வட்டாட்சியர் அலுவலகத்தில், ஆதிதிராவிடர் நலத் துறை மாவட்ட அலுவலர் தேன்மொழியின் தலைமையில் நடைபெற்ற முகாமில், தாசில்தார் சண்முகசுந்தரம் தலைமையில் 16 வருவாய் கிராமங்களை சேர்ந்த பொதுமக்களிடமிருந்து நிலஉடமை, வீட்டு மனை பட்டா, பட்டா மாறுதல் உள்ளிட்ட கோரிக்கைகள் பெறப்பட்டன.


இம்முகாமில் துணை தாசில்தார் நாராயணமூர்த்தி, வருவாய் ஆய்வாளர் வெங்கடேசன் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டு மனுக்களை பெற்றனர். அதேபோல், நல்லம்பள்ளி தாலுகா அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தி முகாமில், மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா தலைமையில் பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெறப்பட்டன. இம்முகாமில் தாசில்தார் சிவக்குமார், துணை தாசில்தார் மூர்த்தி, வருவாய் ஆய்வாளர் யசோதா மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் (விஏஓ) கலந்துகொண்டனர்.


நல்லம்பள்ளி உள்வட்டத்திற்குட்பட்ட 10 வருவாய் கிராமங்களை சேர்ந்த பொதுமக்களிடம் இருந்து சமீபத்திய நில உரிமை, பட்டா மாற்றம் உள்ளிட்ட கோரிக்கைகள் பெறப்பட்டதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்தது.

கருத்துகள் இல்லை:

Post Top Ad