
தருமபுரி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையில் தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்) திட்டத்தின் கீழ் காலியாக உள்ள மூன்று தற்காலிக பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., தெரிவித்துள்ளார்.
தருமபுரி மாவட்ட திட்ட மேலாண்மை அலகு மற்றும் தகவல் கல்வி தொடர்பு மையத்தில் உள்ள இந்த பணியிடங்கள் வெளிச்சந்தை (outsourcing) நிறுவனத்தின் மூலம் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. இந்த பணியிடங்களுக்கு மாவட்ட ஆட்சியர் தலைமையிலான ஐவர் கொண்ட அலுவலர் குழு தேர்வை மேற்கொள்ளும்.
இதில், திட்டமிடுதல், ஒருங்கிணைத்தல் மற்றும் கண்காணித்தல் நிபுணர் என்ற பணிக்கான தகுதியாக பி.டெக், எம்.எஸ்.சி., எம்.பி.ஏ. அல்லது அதற்கு நிகரான பட்டயப்படிப்பு இருக்க வேண்டும். மாத ஊதியம் ரூ.35,000 வழங்கப்படும். மேலும், தகவல் மற்றும் கல்வி தொடர்பு ஆலோசகர் பணிக்கான தகுதியாக மாஸ் கம்யூனிகேஷன் அல்லது மாஸ் மீடியா முதுநிலை பட்டம் வேண்டும். இதற்கான மாத ஊதியம் ரூ.25,000 ஆகும்.
தகுதியான விண்ணப்பதாரர்கள் 28 மே 2025 மாலை 5.45 மணிக்குள் தங்களின் விண்ணப்பங்களை, கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) / திட்ட இயக்குநர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, மாவட்ட ஆட்சியர் வளாகம், தருமபுரி – 636705 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக