
தருமபுரி, மே 20:
பென்னாகரம் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட பகுதியில், இரும்பு கிரில் சூழலுடன் பாதுகாக்கப்பட்ட அம்பேத்கர் சிலையின் பீடத்தில், கடந்த 19.05.2025 அன்று இரவு, அண்ணாநகர் வடக்கு காலனியைச் சேர்ந்த நவீன்குமார் (25), தனது தந்தை ராஜலிங்கம் என்பவருடன் சேர்ந்தே, பெட்ரோல் ஊற்றி தீ வைக்க முயற்சித்துள்ளார்.
சம்பவத்தை கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக தகவல்களை போலீசாருக்கு தெரிவித்து தீயை அணைத்தனர். இதுதொடர்பாக விசிக துணைச் செயலாளரும், முன்னாள் ஆட்டோ சங்க தலைவருமான நாகராஜ் (38) புகார் அளித்ததன் பேரில், பென்னாகரம் காவல் நிலையத்தில் குற்ற எண்: 147/2025 ஆக, BNS 196, 326 மற்றும் தமிழ்நாடு பொது சொத்து சேதப்படுத்தல் தடைக் சட்டம் 3(1) பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
மேற்படி நவீன்குமார் கைது செய்யப்பட்டு, தீ வைக்க காரணமாக மது போதையா அல்லது பிற எதிரிகளால் தூண்டப்பட்டதா என போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் குறித்து தருமபுரி மாவட்ட சமூக ஊடகப்பிரிவு விளக்கம் வழங்கியுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக