
தருமபுரி, மே19-
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை மதிப்பீட்டுக் குழு (2024-2026) தலைவர் திரு S. காந்திராஜன் அவர்கள் தலைமையிலான குழுவினர், வரும் 21.05.2025 அன்று தருமபுரி மாவட்டத்திற்கு வருகை தரவுள்ளனர். இவர்கள், மாவட்டத்தில் நடைபெற்று வரும் பல்வேறு துறைகளின் திட்டப்பணிகளை நேரில் பார்வையிட்டு, கள ஆய்வுகளை மேற்கொள்ளவுள்ளனர். இந்த சுற்றுப்பயணத்தின் முக்கியக் குறிக்கோள், திட்டங்களின் முன்னேற்ற நிலையை மதிப்பீடு செய்து, அத்துறைகள் தொடர்பான செயல்திறனை மேம்படுத்தும் நோக்கில் ஆய்வு நடத்துவது ஆகும்.
அதற்கமைய, அதே நாளில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலுள்ள கூடுதல் கூட்டரங்கில், திட்டப்பணிகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் நடைபெறவுள்ளது. இந்த கூட்டம், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை மதிப்பீட்டுக் குழுத்தலைவர் திரு. S. காந்திராஜன் அவர்களின் தலைமையில் நடைபெற உள்ளது. இதில், அனைத்து துறைகளின் உயர் நிலை அலுவலர்கள் பங்கேற்று தங்களது துறைகள் சார்ந்த முன்னேற்ற விவரங்களை விளக்கவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆய்வுக்கூட்டம், அரசு நடவடிக்கைகள் மற்றும் திட்டங்களின் செயல்பாடுகளை நேரடியாக மதிப்பீடு செய்து, பொதுமக்களுக்கு பயன்படும் வகையில் சேவைகளை மேலும் மேம்படுத்தும் முக்கிய வாய்ப்பாக அமையும். எனவே, மாவட்டத்தின் அனைத்து துறை அலுவலர்களும் இந்த கூட்டத்தில் தவறாது பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக