தர்மபுரி, மே 11, 2025:
இந்தியாவின் எல்லைப் பகுதி காவலில் பாகிஸ்தானுக்கு எதிரான துப்பாக்கிச் சூட்டில் வீரமரணம் அடைந்த ஆந்திராவைச் சேர்ந்த ராணுவ வீரர் முரளி நாயக் அவர்களுக்கு, தமிழக வெற்றிக் கழகத்தின் தர்மபுரி மேற்கு மாவட்டத் தலைமை அலுவலகத்தில் இன்று மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்வில், மாவட்ட செயலாளர் தாபா M.சிவன் வீரர் முரளி நாயக்கின் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். அவருடன் நகர செயலாளர் சிட்டி M. சுரேஷ் மற்றும் மாவட்ட, நகர, ஒன்றிய, வார்டு, கிளை நிர்வாகிகள், சார்பு அணிகள் ஆகியோர் அனைவரும் கலந்து கொண்டு மலர் தூவி தங்கள் அஞ்சலியை செலுத்தினர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக