இந்த நிகழ்வில், தருமபுரியைச் சேர்ந்த எட்டு பெண்கள் மற்றும் ஒரு ஆண், மொத்தம் ஒன்பது நபர்கள், தங்கள் கூந்தலை புற்றுநோய் பாதித்த குழந்தைகளுக்காக நன்கொடையாக வழங்கினர். தானம் செய்தவர்களில் தேன்மொழி, வள்ளி, விஜயலக்ஷ்மி, கௌதமி கமல், குமுதா, கிறிஸ்டினா, ஷோபனா, விஜய் வித்யாலயா ஆண்கள் பள்ளி மாணவி ஜோஷிகா, மற்றும் சேலத்தைச் சேர்ந்த ஆனந்த் ஆகியோர் இடம்பெற்றனர்.
நிகழ்விற்கு சிறப்பு விருந்தினர்களாக சேலம் சண்முகா மருத்துவமனை புற்றுநோய் சிறப்பு மருத்துவர் டாக்டர் பிரசன்னா, மற்றும் BGR மருத்துவமனை மருத்துவர் டாக்டர் ராஜேஷ் ஆகியோர் கலந்து கொண்டு விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இந்த நிகழ்ச்சியை மை தருமபுரி அமைப்பின் நிறுவனத் தலைவர் சதீஸ் குமார் ராஜா, செயலாளர் தமிழ்செல்வன், அமைப்பாளர்கள் கிருஷ்ணன், செந்தில், மற்றும் தன்னார்வலர்கள் கணேஷ், கோகுல்ராஜ், குணசீலன், அம்பிகா, பிரேமா ஆகியோர் ஒருங்கிணைத்தனர். இந்நிகழ்வின் மூலம், புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான சமூக பொறுப்பு மீதான விழிப்புணர்வும், கூந்தல் தானத்தின் முக்கியத்துவமும் வலியுறுத்தப்பட்டன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக