Type Here to Get Search Results !

அதியமான்கோட்டை செந்தில் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு தேர்வில் மாணவர்கள் சாதனை.

அதியமான்கோட்டை செந்தில் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 2024–25 கல்வியாண்டிற்கான பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் எழுதிய அனைத்து மாணவ, மாணவியர்களும் சிறந்த மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில், பலர் மாநில மற்றும் மாவட்ட அளவில் சிறந்த மதிப்பெண்கள் பெற்று பள்ளியின் கல்வித் தரத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.


பள்ளி மாணவரான ராம்சரண். P, 497 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடத்தையும், மாவட்டத்தில் இரண்டாமிடத்தையும், மாநில அளவில் மூன்றாமிடத்தையும் பிடித்து சாதனை படைத்துள்ளார். அவருக்கு பின்னர் துரைராம். M 496 மதிப்பெண்களுடன் இரண்டாமிடத்தையும், கனிஷ்கா. K மற்றும் கனிஷ்கா. M ஆகிய இருவரும் தலா 495 மதிப்பெண்கள் பெற்று மூன்றாமிடத்தையும் பிடித்துள்ளனர். மேலும், அனிஷ் கார்த்திக். V, தருண்குமார். R மற்றும் பிரணவ் சிவம். S ஆகிய மாணவர்களும் 490க்கும் மேற்பட்ட மதிப்பெண்கள் பெற்று சிறப்பாகத் தேர்ச்சி பெற்றுள்ளனர்.


மொத்தமாக, இந்தப் பொதுத் தேர்வில் 460க்கு மேற்பட்ட மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை 90ஐ கடந்துள்ளது. பாடவாரியாகக் கணிக்கும்போது, அறிவியல் பாடத்தில் 20 மாணவர்கள் முழு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். கணிதத்தில் ஆறு மாணவர்கள், ஆங்கிலத்தில் ஒரு மாணவர் நூறு மதிப்பெண்களைப் பெற்றுள்ளனர். சமூக அறிவியல் பாடத்திலும் மாணவர்கள் மிகச் சிறப்பான மதிப்பெண்களைப் பெற்றுள்ளனர்.


இந்த வெற்றியை முன்னிட்டு, செந்தில் கல்வி நிறுவனங்களின் தலைவர் திரு செந்தில் சி. கந்தசாமி, துணைத்தலைவர் திருமதி மணிமேகலை கந்தசாமி, செயலாளர் திரு தனசேகர், தாளாளர் திருமதி தீப்தி தனசேகர், நிர்வாக அலுவலர் திரு ஜெ. கார்த்திகேயன், முதன்மை முதல்வர் திரு ஸ்ரீனிவாசன், முதல்வர் திரு சிவராமகிருஷ்ணன் மற்றும் கல்வி ஒருங்கிணைப்பாளர் திரு தீபலட்சுமி ஆகியோர் மாணவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். மாணவர்களின் வெற்றிக்கு பாடம் கற்பித்த ஆசிரியர்களின் விடாமுயற்சியும், பெற்றோர்களின் உறுதுணையும் முக்கிய பங்கு வகித்ததாக பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies