
பிளஸ்-2 பொதுத் தேர்வில், மாணவிகள் தூபா மற்றும் கீர்த்தனா தலா 492 மதிப்பெண்கள் பெற்று பள்ளி அளவில் முதலிடத்தையும், மாவட்ட அளவில் சிறந்த மாணவர்களாகக் கருதப்படுகின்றனர். அவர்களைத் தொடர்ந்து, சுசீந்தர் மற்றும் ருதுவர்ஷினி ஆகியோர் 487 மதிப்பெண்களுடன் இரண்டாம் இடத்தையும், மஹதி பிரியதர்ஷினி மற்றும் அனுவர்ஷினி ஆகியோர் 485 மதிப்பெண்களுடன் மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளனர்.
அதேபோன்று 10-ம் வகுப்பு பொதுத்தேர்விலும் செந்தில் பள்ளி மாணவர்கள் சாதனைப் பதிவு செய்துள்ளனர். மாணவி ஆராதனா 500க்கு 497 மதிப்பெண்கள் பெற்று பள்ளி மட்டுமின்றி மாவட்டம் மற்றும் மாநில அளவிலும் சிறப்பிடம் பெற்றுள்ளார். மாணவிகள் யாழினி மற்றும் ஆஷிபா பர்ஹானா தலா 496 மதிப்பெண்களுடன் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளனர். தன்வி என்ற மாணவி 494 மதிப்பெண்களுடன் மூன்றாம் இடத்தில் உள்ளார். மேலும், இந்தப் பள்ளியில் 490 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற மாணவர்கள் 14 பேராக உள்ளனர்.
இந்த வெற்றியை முன்னிட்டு, தர்மபுரி மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. சதீஷ், ஐ.ஏ.எஸ்., பள்ளியை நேரில் வருகை தந்து மாணவ, மாணவிகளை பொன்னாடை அணிவித்து, ரொக்கப் பரிசும் கேடயமும் இனிப்புகளும் வழங்கி நேரில் வாழ்த்தினார். பள்ளியின் வெற்றிக்கு காரணமான மாணவர்களுக்கும், அவர்களை வழிநடத்திய ஆசிரியர்களுக்கும் செந்தில் கல்வி நிறுவனங்களின் தலைவர் திரு. செந்தில் கந்தசாமி, துணைத் தலைவர் திருமதி மணிமேகலை கந்தசாமி, செயலாளர் திரு கே. தனசேகர், தாளாளர் திருமதி தீப்தி தனசேகர், நிர்வாக அலுவலர் திரு ஜே. கார்த்திகேயன், முதன்மை முதல்வர் திரு சி. சீனிவாசன், முதல்வர் பி. செந்தில்முருகன், துணை முதல்வர் எஸ். ராஜ்குமார், கல்வி ஒருங்கிணைப்பாளர்கள் எம். ஞானகவிதா, பி.எஸ். தீபா, ஆர். ராஹினாபானு ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.
மாணவர்கள் பெற்ற இச்சிறப்பான வெற்றி, பள்ளியின் தரமான கல்வி முறையின் நம்பகத் தன்மையையும், ஆசிரியர்களின் அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்துவதாக அனைவரும் பெருமையுடன் தெரிவித்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக