அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம் (AABCS)-ன் கீழ் நிதியுதவியும், மானியமும் பெறுவதற்கான வாய்ப்பு. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 17 மே, 2025

அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம் (AABCS)-ன் கீழ் நிதியுதவியும், மானியமும் பெறுவதற்கான வாய்ப்பு.



தருமபுரி, மே 16:

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின சமுதாயங்களைச் சேர்ந்த தொழில்முனைவோர்களுக்காக அரசால் செயல்படுத்தப்படும் அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம் (AABCS)-ன் கீழ் நிதியுதவியும், மானியமும் பெறுவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் கீழ், நேரடி வேளாண்மையைத் தவிர்த்து, உற்பத்தி, சேவை மற்றும் வணிகம் சார்ந்த தொழில்கள் அனைத்துக்கும் கடனுதவியுடன் கூடிய மானியம் வழங்கப்படும்.


மாணியம் விவரம்:

  • உற்பத்தி தொழில்களுக்கு: திட்ட மதிப்பீட்டில் 35% வரை (அதிகபட்சம் ₹1 கோடி வரை)

  • சேவை தொழில்களுக்கு: அதிகபட்சம் ₹0.75 கோடி

  • வணிகத் தொழில்களுக்கு: அதிகபட்சம் ₹0.50 கோடி
    மேலும், கடன் திருப்பிச் செலுத்தும் காலம் முழுவதும் (அதிகபட்சம் 10 ஆண்டுகள்) 6% வட்டி மானியமும் வழங்கப்படும்.


இந்த திட்டத்திற்காக கல்வித் தகுதி அவசியமில்லை. விண்ணப்பதாரர்கள் 18 முதல் 55 வயதுக்குள் இருக்க வேண்டும்.
அதே நேரத்தில், நேரடி வேளாண்மை, விவசாய உபகரணங்கள், கட்டுமானப் பணிகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய தொழில்கள் இத்திட்டத்திற்கு தகுதியற்றவையாகும்.


விண்ணப்பிப்பது எப்படி?
தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள், திட்ட அறிக்கையும் தேவையான ஆவணங்களுடனும் இணைத்து www.msmeonline.tn.gov.in என்ற இணையதளத்தின் வழியாக விண்ணப்பிக்கலாம்.


மேலதிக தகவலுக்கு:
பொது மேலாளர், மாவட்டத் தொழில் மையம், ஒட்டப்பட்டி, தருமபுரி – 636705 தொலைபேசி: 8925533941, 8925533942, தொழில்முனைவோர் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு, மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் அறிவுறுத்தியுள்ளார். 

கருத்துகள் இல்லை:

Post Top Ad