Type Here to Get Search Results !

பாலக்கோடு ஸ்ரீ வித்யா மந்திர் பள்ளியில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் நூறு சதவீத சாதனை – தாளாளர் ஜீ பாராட்டு.


பாலக்கோடு, மே 17:

தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில் செயல்பட்டு வரும் ஸ்ரீ வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, 2024–2025 ஆம் கல்வியாண்டு பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் நூறு சதவீத வெற்றியுடன் பெருமையை பெற்றுள்ளது. இப்பள்ளியின் மாணவர்கள் பலர் உயர்ந்த மதிப்பெண்கள் பெற்று தனித்திறமை காட்டினர். மாணவர் மா. ஸ்ரீ சரண் 495 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தையும், ர. திவேஷ் 494 மதிப்பெண்கள் பெற்று இரண்டாமிடத்தையும், கோ. ஸ்ரீமது 493 மதிப்பெண்கள் பெற்று மூன்றாமிடத்தையும் பெற்றுள்ளனர்.


மேலும் 490க்கு மேல் 7 மாணவர்கள், 480க்கு மேல் 22 மாணவர்கள், 450க்கு மேல் 81 மாணவர்கள் மற்றும் 400க்கு மேல் 165 மாணவர்கள் தேர்ச்சி பெற்று பள்ளியின் தரத்தை நிலைநாட்டியுள்ளனர். சுமாராக 237 மாணவர்கள் தேர்வு எழுத, அனைவரும் தேர்ச்சி பெற்று நூறு சதவீத வெற்றியைப் பதிவு செய்துள்ளனர்.


இந்த சாதனையைக் கொண்டாடும் வகையில், பள்ளியில் சிறப்பு பாராட்டுவிழா நடைபெற்றது. இதில் பள்ளித் தாளாளர் திரு. மூகாம்பிகை. கே. கோவிந்தராஜ் ஜீ அவர்கள் மாணவர்களை நேரில் சந்தித்து பாராட்டுத் தெரிவித்ததோடு, பரிசுகளையும் வழங்கி ஊக்கமளித்தார். நிகழ்ச்சியில் பள்ளி நிர்வாக குழு உறுப்பினர்கள், முதல்வர், ஆசிரியர்கள், பெற்றோர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களை வாழ்த்தி பாராட்டினர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies