தருமபுரி மாவட்டம் பென்னாகரம் சாலையில் செயல்பட்டு வரும் ஸ்ரீ விஜய் வித்யாலயா மெட்ரிக்மேல்நிலைப்பள்ளியின் மாணவர்கள், 2024–25 கல்வியாண்டு பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் மாநில அளவில் மதிப்பெண்கள் பெற்று சிறப்பான சாதனையைப் பதிவு செய்துள்ளனர். இதில் மாணவி ராகவி 500ல் 497 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தையும், அனுகீர்த்தனா 496 மதிப்பெண்கள் பெற்று இரண்டாமிடத்தையும், லிஷிதாஸ்ரீ, வித்தியாஸ்ரீ மற்றும் சாருநிதா ஆகிய மூன்று மாணவிகள் தலா 494 மதிப்பெண்கள் பெற்று மூன்றாமிடத்தையும் பிடித்தனர்.
தேர்வில் பெரும்பாலான மாணவர்கள் அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெற்று, அதில் 145 பேர் 100 மதிப்பெண்களைப் பெற்றுள்ளனர். குறிப்பாக ஆங்கிலம், கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களில் அதிகபட்சமாக நூறு மதிப்பெண்களை பெற்ற மாணவர்கள் மாவட்ட அளவில் அதிகமாக உள்ளனர். இதன் மூலம் தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் முன்னணி சாதனைப் பள்ளியாக விளங்குகிறது.
இந்த சாதனையை போற்றும் வகையில், பள்ளியில் பாராட்டுவிழா நடைபெற்றது. இதில் கல்விக்குழுமத் தலைவர் திரு. டி.சி. இளங்கோவன் தலைமை வகித்து மாணவர்களுக்கு இனிப்புகள் மற்றும் கல்வி உதவித்தொகை ஆணைகளை வழங்கினார். நிகழ்ச்சியில் தாளாளர் திருமதி மீனா இளங்கோவன், இயக்குநர்கள் திரு. பிரேம், திருமதி சினேகா பிரவின், தலைமை செயல்பாட்டு அலுவலர் திரு. சந்திரபானு, மூத்த முதல்வர் முனைவர் பிரெடரிக் சாம், முதல்வர்கள் திருமதி பத்மா, திருமதி சிவகாமசுந்தரி, மற்றும் திரு. ஜெயசீலன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
பாராட்டு உரையாற்றிய தலைவர் திரு. டி.சி. இளங்கோவன், மாநிலத் தரத்தில் வெற்றி பெற்று சாதனை படைத்த மாணவர்களை நேரில் பாராட்டி, கிராமப்புற மாணவர்கள் நீட், ஜெய்இஇ, ஐஏஎஸ், ஆடிட்டர் போன்ற போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறும் வகையில் விஜய்ஸ் ஏஸ் அகாடமி செயல்பட்டு வருவதாகவும், பல்வேறு கல்வி உதவித் திட்டங்கள் தொடர்ந்து வழங்கப்பட்டுவருவதாகவும் குறிப்பிட்டார். தாளாளர் திருமதி மீனா இளங்கோவன், பதினொராம் வகுப்பு சேர்க்கை தொடங்கியுள்ளதாகவும், மாணவர்கள் குறிக்கோளுடன் பாடப்பிரிவுகளை தேர்வு செய்து விடாமுயற்சியுடன் பயின்று சிறந்த எதிர்காலத்தை கட்டியெழுப்ப வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
மாணவர்களின் வெற்றிக்கு வழிகாட்டிய ஆசிரியர்கள், உறுதியளித்த பெற்றோர்கள் மற்றும் தன்னலைக்கொடுத்து உழைத்த அலுவலக ஊழியர்கள் ஆகியோருக்கு பள்ளி நிர்வாகம் நன்றியும் பாராட்டுகளையும் தெரிவித்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக