Type Here to Get Search Results !

பாலக்கோடில் திமுக தெற்கு ஒன்றிய பொறுப்பாளராக ஆனந்தன் நியமனம் – தொண்டர்கள் உற்சாக வரவேற்பு.


பாலக்கோடு, மே 31:

தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட தெற்கு ஒன்றிய திமுக பொறுப்பாளராக ப. ஆனந்தன் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனம் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்ட அறிவிப்பின் மூலம் நடைபெற்றது.


புதிய பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட ப. ஆனந்தன், முன்னதாக ஜெர்தலாவ் ஊராட்சி மன்றத் தலைவராகவும், திமுக விளையாட்டு மேம்பாட்டு அணியின் மாவட்ட தலைவராகவும் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். இவர், கட்சியில் நீண்ட காலமாக பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார். அவரது நியமனத்திற்கு, மண்டல பொறுப்பாளர் எ.வ.வேலு, மாவட்ட பொறுப்பு அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், மேற்கு மாவட்ட செயலாளர் பி. பழனியப்பன், தர்மபுரி எம்.பி. ஆ.மணி உள்ளிட்டோர் பரிந்துரை செய்திருந்தனர்.


நியமனத்தையடுத்து, பாலக்கோடு திமுக அலுவலகத்தில் ஆனந்தன் அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், ரோஜாப்பூ மாலை அணிவித்தும், இனிப்பு வழங்கியும் நல்வரவேற்பு தெரிவித்தனர்.


இந்நிகழ்ச்சியில் முன்னாள் ஒன்றிய குழுத் தலைவர் வி.எம். நாகராஜன், ஒன்றிய அவைத்தலைவர் ராஜாமணி, ஒன்றிய துணைச் செயலாளர் அண்ணாமலை, கிளைச் செயலாளர்கள், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் மணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். திரளான கட்சி தொண்டர்களும் பங்கேற்றனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies