தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் பட்டுப்புழுவியல் துறையில், இளம் அறிவியலாளர்களாக திகழும் நான்காம் ஆண்டு பட்டுப்புழுவியல் மாணவர்கள் ப.மா. தீபக், சி. தேவானந்த், ரா. கணேஷ், பு. கௌதம், மற்றும் ர. ஜெயராமன் ஆகியோர், ஊரக பட்டுப்புழுவியல் பணி அனுபவத்திட்டத்தின் (RSWE) கீழ் தருமபுரி மாவட்டத்தில் இரண்டு மாத காலம் பயிற்சி பெற்று வருகின்றனர்.
பயிற்சி திட்டத்தின் மூலம், இவர்கள் தருமபுரி மாவட்டத்தில் உள்ள பட்டுப்புழு வளர்ப்பு விவசாயிகளை சந்தித்து, பட்டு வளர்ப்பு தொழில்நுட்பங்களை செயல்முறை விளக்கம் அளித்தனர். அதுடன், பட்டு வளர்ச்சி துறை அலுவலகங்களை சென்று அங்கு நடைபெறும் செயல்பாடுகளில் பங்கேற்றனர். மேலும், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் (FPOs) மற்றும் அரசு சாரா தொண்டு நிறுவனங்களின் (NGOs) செயல்பாடுகளிலும் பங்கேற்று கற்றறிந்தனர்.
இந்த பயிற்சி திட்டத்தின் ஒரு பகுதியாக, தருமபுரியில் உள்ள சர்கா பட்டு நூற்பாலை, சிட்கோ தொழில் மையம், காட்டேஜ் பேசின் பட்டு நூற்பாலைகள், பலமுனை பட்டு நூற்பாலைகள், பட்டு நூல் முருக்காலைகள் மற்றும் ஓசூர் அருகே சூலகிரியில் அமைந்துள்ள தானியங்கி பட்டு நூற்பாலைகளில் ஒரு வாரம் தொழிற்சாலை திறன் மேம்பாட்டு பயிற்சி பெற்றனர். இதில், தொழிற்சாலைகளின் தினசரி செயல்பாடுகளில் பங்கேற்று, அவற்றின் செயல்பாட்டுத் திறன் மற்றும் வரவு செலவு கணக்குகளையும் கேட்டறிந்தனர்.
இதன் மூலம், மாணவர்கள் பட்டு உற்பத்தி செயல்முறைகள் மற்றும் தொழில்நுட்பங்களை நேரடி அனுபவத்தில் கற்றுக்கொள்வதுடன், பாட்டு தொழிலுக்கு மேலும் விரிவான பார்வையை பெற்றுள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக