பயிற்சியின் ஒரு பகுதியாக, இம்மாணவர்கள் அரூர் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள பட்டுப்புழு விவசாயிகளை நேரில் சந்தித்து, தொழில்நுட்ப விளக்கங்களை வழங்கினர். குறிப்பாக, கம்பை நல்லூர், மொரப்பூர், அம்மாபேட்டை, ஜடையம்பட்டி, அப்பியம்பட்டி, சந்தப்பட்டி, ஒடசல்பட்டி, தின்னப்பட்டி, கதிர்நாயக்கனஅள்ளி, கடத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் தொடர்பில் இருந்தனர்.
பட்டு வளர்ச்சித் துறையின் உதவி ஆய்வாளர் சசிகலா மற்றும் இளநிலை ஆய்வாளர்கள் அனிதா, ரம்யா, நடராஜன் ஆகியோரின் வழிகாட்டுதலின் கீழ் பயிற்சி நடைப்பெற்றது. மாணவர்கள், நோய் பாதிப்பு இல்லாத தூய்மையான முறையில் பட்டுப்புழு வளர்ப்பு செய்வது குறித்தும், புழுக்களின் வளர்ச்சிக்கான சரியான சூழ்நிலை மற்றும் பராமரிப்பு முறைகள் குறித்தும் விவசாயிகளுக்கு விளக்கங்களை வழங்கினர்.
விவசாயிகள் எழுப்பிய சந்தேகங்களுக்கு தெளிவான பதில்கள் அளித்து, அவர்களின் நம்பிக்கையை வளர்த்த இம்மாணவர்கள், நவீன தொழில்நுட்பங்களையும் அறிமுகப்படுத்தினர். இது, பாரம்பரியமாக இயங்கும் பட்டுப்புழு வளர்ப்பு தொழிலுக்கு புதிய பரிணாமம் கொடுக்கக்கூடிய முயற்சியாக அமைந்தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக