தருமபுரி, மே 7:
தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ்.எஸ். மகேஸ்வரன் தலைமையில், 07.05.2025 அன்று மாவட்ட காவல் அலுவலகத்தில் பொதுமக்களின் குறைகளை நேரடியாக பெற்றுக் கொள்வதற்காக சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் திரு. பாலசுப்பிரமணியம், திரு. ஸ்ரீதரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். வட்டார காவல் அதிகாரிகள், ஆய்வாளர்கள், துணை ஆய்வாளர்கள், போலீஸ் பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டனர்.
முகாமில் மொத்தம் 72 மனுக்கள் பெறப்பட்டு அவற்றில் 71 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது. புதியதாக 49 மனுக்கள் மக்கள் சார்பில் பெறப்பட்டன. நில உரிமைத் தகராறு, குடும்ப பிரச்சினைகள், காவல் நடவடிக்கைகள் தொடர்பான புகார்கள், சமூக பிரச்சினைகள் உள்ளிட்டவையாக மனுக்கள் காணப்பட்டன. பொதுமக்கள் தங்களது குறைகளை நேரில் தெரிவித்ததில் திருப்தி தெரிவித்தனர். உடனடியாக விசாரணை செய்து தீர்வு வழங்கிய காவல் அதிகாரிகளை பொதுமக்கள் பாராட்டினர். இத்தகைய முகாம்கள் காவல் துறையினதும் மக்களினதும் இடையே நேரடி தொடர்பு ஏற்படுத்தி நம்பிக்கையை வளர்த்துக் கொடுக்கின்றன என்பதை நிரூபிக்கின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக