தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், பூனையனூர் கிராமத்தைச் சேர்ந்த ராஜா மகன் சு.அருண் (அka சு.அருண்ராஜா) மற்றும் ஜெகன் ஆகிய இருவரும், Perfect Vision Chits Pvt. Ltd என்ற பெயரில் நிதி நிறுவனத்தை தருமபுரி டவுன், பென்னாகரம் மெயின் ரோடு, கோதுமை மில் எதிரில் உள்ள பண்ணாரி அம்மன் டிபார்ட்மெண்ட் மேல்மாடியில் நடத்தி வந்துள்ளனர்.
இந்நிறுவனம்,
- ரூ.1,00,000 முதலீட்டுக்கு ரூ.1,800 வீதம் 100 நாட்கள்,
- ரூ.10,000 முதலீட்டுக்கு ரூ.180 வீதம்,
- ரூ.2,00,000 முதலீட்டுக்கு ரூ.3,600 வீதம்,
- ரூ.25,00,000 முதலீட்டுக்கு ரூ.4,00,000 வீதம் 10 மாதங்கள் என,
இந்த முறைகேடு தொடர்பாக, தருமபுரி பொருளாதார குற்றப்பிரிவில் கு. எண் 1/2023, ஈ.த.ச. பிரிவு 420 மற்றும் தமிழ்நாடு முதலீட்டாளர்கள் நலன்கள் பாதுகாப்புச் சட்டம் 1997 (TNPID Act – பிரிவு 5) கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இருவரும் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் அனுப்பப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், தமிழ்நாடு முதலீட்டாளர்கள் நலன்கள் பாதுகாப்புச் சட்டம், 1997 (தமிழ்நாடு சட்டம் 44/97), பிரிவு 3-ன் கீழ் அரசு ஆணை எண் (2D).276 உள் (காவல்-XIX) துறை நாள்: 02.09.2024-ன்படி இடைமுடக்கம் செய்யப்பட்ட நிறுவனத்தின் சொத்துக்களுக்கு, சட்டப்பிரிவு 7(6)-ன் படி கோவை TNPID சிறப்பு நீதிமன்றம், வழக்கு எண் O.A.26/2025, தீர்ப்பு நாள் 02.04.2025-ல் விற்பனைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, Perfect Vision Chits Pvt. Ltd நிறுவனத்திற்குச் சொந்தமான அசையும் சொத்து, தருமபுரி தகுதி பெற்ற அலுவலர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி இரா.கவிதா அவர்களால், 23.05.2025 அன்று முற்பகல் 11.00 மணிக்கு, தருமபுரி மாவட்ட வருவாய் அலுவலர் விசாரணை மன்ற அரங்கில் பொது ஏலத்தில் விற்பனை செய்யப்படுகிறது.
ஏல நிபந்தனைகள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் அனைத்து வட்டாட்சியர் அலுவலக விளம்பர பலகைகளில் ஒட்டப்பட்டுள்ளது. ஏல நிபந்தனைகளின் கீழ் ஏலத்தில் கலந்துகொள்ள விருப்பமுள்ளோர் அனைவரும் பங்கேற்கலாம். மேற்கண்ட சொத்துகளை, மாருதி மெஸ் அருகில், வள்ளுவர் நகர், ஒட்டப்பட்டி, நல்லம்பள்ளி வட்டம் என்ற முகவரியில் உள்ள தருமபுரி பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில், ஏல தேதிக்கு முன்பாக பார்வையிடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக