இது தொடர்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மாணவர்கள் மே 7 முதல் மே 27, 2025 வரை www.tngasa.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளார்.
தருமபுரி மாவட்டத்தில் மொத்தம் 7 அரசு கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. அவற்றில் கல்லூரி வாரியான மாணவர் சேர்க்கை இடங்கள் விவரம்:
-
தருமபுரி அரசு கலைக் கல்லூரி – 1896 இடங்கள்
-
காரிமங்கலம் அரசு மகளிர் கல்லூரி – 640 இடங்கள்
-
பாலக்கோடு எம்.ஜி.ஆர் அரசு கல்லூரி – 1270 இடங்கள்
-
பென்னாகரம் அரசு கல்லூரி – 280 இடங்கள்
-
அரூர் அரசு கல்லூரி – 450 இடங்கள்
-
பாப்பிரெட்டிப்பட்டி அரசு கல்லூரி – 380 இடங்கள்
-
ஏரியூர் அரசு கல்லூரி – 260 இடங்கள்
இக்கல்லூரிகளில் பணியாற்றும் திறமையான ஆசிரியர்கள், சிறந்த கட்டமைப்பு வசதிகள், மேலும் மாணவர்களுக்கான அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் உள்ளன.
அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் கல்விக் கட்டண விலக்கு பெறுவர். மேலும் புதுமைப்பெண் மற்றும் தமிழ்ப்புதல்வன் திட்டங்கள் மூலமாக மாதம் ரூ.1000/- அளவிற்கு உதவித் தொகை வழங்கப்படுகிறது. நான் முதல்வன் திட்டம் மூலம் வேலைவாய்ப்பு பயிற்சிகள் வழங்கப்படும்.
தாமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க முடியாதவர்கள், மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு கல்லூரிகளிலும் செயல்படும் Admission Facilitation Centre (AFC)-களை பயன்படுத்தலாம். விண்ணப்பக் கட்டணம் பொதுப்பிரிவினருக்கு ரூ.48 மற்றும் ரூ.2 பதிவுக்கட்டணம். SC/ST பிரிவினருக்கு ரூ.2 மட்டுமே செலுத்த வேண்டும். கட்டணங்கள் Debit/Credit Card, Net Banking, UPI போன்ற வழிகளிலான ஆன்லைன் மூலமாக செலுத்தலாம்.
மேலும் விவரங்களுக்கு, மாணவர்கள் சென்னை கல்லூரிக் கல்வி இயக்ககத்தின் உதவி மையத்தை திங்கள் முதல் வெள்ளி வரை, காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை 044 – 24343106 / 24342911 என்ற தொலைபேசி எண்களில் தொடர்புகொள்ளலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக