தருமபுரி, மே 14 –
தருமபுரி கோட்டம், சோகத்தூர் 110/33-11 கிவோ துணைமின் நிலையத்திற்குட்பட்ட வெண்ணாம்பட்டி பிரிவில் உள்ள 11167 AR கோட்ரஸ் பீடரில் வரும் 17.05.2025 (சனிக்கிழமை) அன்று அவசரகால பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், கீழ்க்கண்ட பகுதிகளில் மின்தடை செய்யப்படும் என்று செயற்பொறியாளர், இயக்கமும் பராமரிப்பும், தருமபுரி தெரிவித்துள்ளனர்.
அன்று மின் 117 AR கோட்ரஸ் மின்பாதை மூலம் மின்சாரம் வழங்கப்படும் பகுதிகளில்:
-
வி.ஜெட்டிஅள்ளி
-
வேப்பமரத்துக்கொட்டாய்
-
வெள்ளகவுண்டன் பாளையம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்கள்
17.05.2025 சனிக்கிழமை காலை 10.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்படும். எனவே பொதுமக்கள் மின்தடையை முன்னிட்டு தேவையான முன்னேற்பாடுகளை மேற்கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது.