ஆப்ரேஷன் சிந்தூர் தாக்குதலுக்கு வீர வணக்கம்: தர்மபுரியில் முன்னாள் ராணுவ வீரர்களின் அமைதி ஊர்வலம். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 20 மே, 2025

ஆப்ரேஷன் சிந்தூர் தாக்குதலுக்கு வீர வணக்கம்: தர்மபுரியில் முன்னாள் ராணுவ வீரர்களின் அமைதி ஊர்வலம்.



தருமபுரி, மே 19-

ஜம்மு காஷ்மீரின் பஹால்காம் பகுதியில் ஏப்ரல் 22ம் தேதி இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக, இந்திய ராணுவம் மேற்கொண்ட ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையை பாராட்டி, அதில் வீரச்சாவடைந்த வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் தர்மபுரி மாவட்டத்தில் அமைதி ஊர்வலம் நடைபெற்றது.


தகடூர் பகுதியில் உள்ள முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் வீரமங்கையர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த அமைதி ஊர்வலம், முன்னாள் ராணுவவீரர்கள் கூட்டமைப்பின் அலுவலகத்தில் இருந்து தொடங்கி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை நடந்தது. இதில் கர்னல் சேரன் செங்குட்டுவன், கர்னல் தியாகராஜன், மாணிக்கம், மாவட்ட கௌரவ தலைவர் நரசிம்மன், மாவட்ட தலைவர், பொருளாளர் பொன்னுசாமி, வையாபுரி, முனியப்பன், துணைத் தலைவர் புகழேந்தி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு உரையாற்றினர்.


மேலும், ஒருங்கிணைப்பாளர் மணிவண்ணன், மல்லிகார்ஜுனன், சின்னசாமி, ராஜாஜி, ஸ்ரீ முருகன், பஸ்வராஜ், சிவசங்கரன், ரகு சின்னசாமி, முருகன், ராஜகோபால், கோவிந்தசாமி, செல்வராஜ், முனுசாமி, கிருஷ்ணன் உள்ளிட்ட முன்னாள் ராணுவவீரர்கள் மற்றும் தர்மபுரி அரசு கலைக்கல்லூரி என்சிசி அலுவலர் ஆனந்தன் உள்ளிட்ட பலரும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.


பாகிஸ்தானுக்கு உரிய பதிலடி கொடுத்த நம் இந்திய ராணுவத்தின் வீரத்தையும், தியாகத்தையும் பொதுமக்கள் மத்தியில் போற்றும் நோக்கத்துடன் இந்த ஊர்வலம் அமைப்பான முறையில் நடைபெற்றது. 

கருத்துகள் இல்லை:

Post Top Ad