தருமபுரியில் அரசு ஊழியர் சங்கத்தின் ஆர்ப்பாட்டம் – பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தல். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 20 மே, 2025

தருமபுரியில் அரசு ஊழியர் சங்கத்தின் ஆர்ப்பாட்டம் – பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தல்.


தருமபுரி, மே 19-

அகில இந்திய அளவிலான மாவட்ட தலைநகர் ஆர்ப்பாட்டத்தின் ஒரு பகுதியாக, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாநில அரசு ஊழியர்களின் நலனுக்காக முக்கியமான கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.


இந்த நிகழ்வுக்கு மாவட்ட தலைவர் எம். சுருளிநாதன் தலைமை வகிக்க, மாவட்ட செயலாளர் ஏ. தெய்வானை, பொருளாளர் எம். அன்பழகன், இணைச் செயலாளர் ஆர். முருகன், மாநில செயற்குழு உறுப்பினர் சக்தி மற்றும் நிர்வாகிகள் தினமணி, திம்மராயன், முனிராஜ் உள்ளிட்ட பலர் உரையாற்றினர். சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியர் சங்க மாவட்ட செயலாளர் சி. காவேரியும் கலந்து கொண்டு வாழ்த்துரை நிகழ்த்தினார்.


ஆர்ப்பாட்டத்தில், பிஎஃப்ஆர்டிஏ திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும், சத்துணவு, அங்கன்வாடி மற்றும் ஆஷா ஊழியர்களை நிரந்தர பணியில் சேர்க்க வேண்டும், 8வது ஊதியக்குழுவை உடனடியாக அமல்படுத்த வேண்டும், ஒப்பந்த பணியாளர்கள், அவுட்சோர்சிங் ஊழியர்களை நிரந்தரமாக்க வேண்டும், ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை விலைக்குறியீட்டுடன் ரூ.26,000 குறைந்தபட்ச ஊதியமாக நிர்ணயிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.


மேலும், மத்திய அரசின் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், காலாவதியான பணியிடங்களை புதுப்பிக்க வேண்டும் என்பதும் அவர்களின் பிரதான கோரிக்கைகளில் அடங்கும். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான அரசு ஊழியர்கள் கலந்துகொண்டு தங்களது ஆதரவை தெரிவித்தனர். 

கருத்துகள் இல்லை:

Post Top Ad