Type Here to Get Search Results !

பெல்லுஅள்ளியில் சூறை காற்றுடன் ஆலங்கட்டி மழையால் சேதமான பப்பாளி தோட்டம் – இழப்பீடு கோரும் விவசாயி


பாலக்கோடு, மே 3:

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள பெல்லுஅள்ளி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ராமன், தனது 3 ஏக்கர் நிலத்தில் சொட்டு நீர் பாசனம் மூலம் பப்பாளி சாகுபடி செய்து வந்தார். ஒரு பப்பாளி செடிக்கு ரூ.15 செலவிட்டு மொத்தம் 2,000 பப்பாளி செடிகள் நட்டு வளர்த்து வந்த இவர், இதுவரை சுமார் ரூ.8 இலட்சம் வரை செலவு செய்துள்ளார்.


இந்நிலையில் நேற்று இரவு, சூறாவளி காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்ததால், பப்பாளி மரங்கள் பலவும் வேறோடு சாய்ந்தும், சில இரண்டாக உடைந்து, பெரும் சேதத்துக்கு உள்ளானது. பல பழங்கள் மண்ணில் விழுந்து நாசம் அடைந்துள்ளன. இதனால் பண்ணையில் பெரியளவில் வருமான இழப்பு ஏற்பட்டுள்ளது.


பப்பாளி அறுவடைக்கு இவ்வளவு நாள் காத்திருந்து, கடன் வாங்கி பயிரிட்டு இருந்த நிலையில் இவ்வாறு சேதம் ஏற்படுவதால், விவசாயி ராமன் கடன் சுமையில் சிக்கி வருகிறார். மேலும், இதுவரை வருவாய் துறை அல்லது வேளாண்மை துறையினரால் எந்தவிதமான பார்வையும், ஆய்வும் நடத்தப்படவில்லை என அவர் கவலை வெளியிட்டுள்ளார்.


“எனது வாழ்வாதாரம் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, தமிழக அரசு தற்காலிக நிவாரண நிதியாகவோ அல்லது பயிர்ச் சேத நஷ்டஈடாகவோ, உரிய தொகையை வழங்க வேண்டும்” என விவசாயி ராமன் மனமுவந்து கோரிக்கை விடுத்துள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884