பாப்பாரப்பட்டியில் இயற்கை விவசாயிகள் சங்க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 18 மே, 2025

பாப்பாரப்பட்டியில் இயற்கை விவசாயிகள் சங்க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்.


பாப்பாரப்பட்டி, மே 18 –

தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி, அறிவுக்கண் திருமண மண்டபத்தில் இயற்கை விவசாயிகள் சங்கத்தின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 4 மணிக்கு சங்க செயலாளர் திரு. முனுசாமி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சங்க நிர்வாகிகள் இணைந்து செயல்படுவதற்கான வழிகள், நிர்வாகத்தில் மாற்றங்கள் மேற்கொள்வது குறித்த ஆலோசனைகள், மற்றும் பஞ்சாயத்து வாரியாக நிர்வாகிகளுக்கு பொறுப்புகள் வழங்கும் திட்டம் குறித்தும் விரிவாக பேசப்பட்டது.

நிகழ்விற்கு முன்னதாக, பகல்காமில் தீவிரவாதிகளின் தாக்குதலில் உயிரிழந்தவருக்கும், உடல்நலக் குறைவால் காலமான சங்க உறுப்பினருக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் உரையாற்றிய செயலாளர் முனுசாமி, “நிர்வாகிகள் அனைவரும் அதிக ஆர்வத்துடன், கட்டமைக்கப்பட்ட ஒழுங்குமுறையில் சங்க பணிகளில் ஈடுபட வேண்டும்” என கேட்டுக்கொண்டார். இந்த கூட்டத்தில் இயற்கை விவசாயிகள் சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பலர் பங்கேற்று, தங்களது கருத்துக்களை பகிர்ந்தனர். 

கருத்துகள் இல்லை:

Post Top Ad