பாலக்கோடு கல்கூடபட்டி சாலையில் திறந்தவெளி கிணறு – விபத்து அபாயம், பாதுகாப்பு நடவடிக்கை கோரிக்கை. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 20 மே, 2025

பாலக்கோடு கல்கூடபட்டி சாலையில் திறந்தவெளி கிணறு – விபத்து அபாயம், பாதுகாப்பு நடவடிக்கை கோரிக்கை.


பாலக்கோடு, மே 20:

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே காவப்பட்டி பகுதியில் உள்ள கல்கூடஹள்ளி புதிய தேசிய நெடுஞ்சாலை சந்திப்பில் தடுப்பு சுவர் இல்லாத திறந்தவெளி கிணறு, விபத்து ஏற்படும் அபாயத்தை உருவாக்கி உள்ளது. பாலக்கோடு-பெரியம்பட்டி தேசிய நெடுஞ்சாலையுடன் இணையும் முக்கிய சாலையில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் போக்குவரத்தில் ஈடுபடுகின்றன. ராயக்கோட்டை, ஓசூர், பெங்களூர் உள்ளிட்ட இடங்களிலிருந்து வரும் வாகனங்கள் இந்த வழியாக சென்று வருகின்றன.

பரபரப்பான இந்த சாலை ஓரத்தில் எச்சரிக்கை பலகை, உரிய தடுப்பு சுவர் இல்லாமல் ஒரு திறந்தவெளி கிணறு உள்ளது. பெயரளவில் சில தடுப்புகள் இருந்தாலும், அவை போதிய பாதுகாப்பு ஏற்படுத்தவில்லை. குறிப்பாக, இப்பாதையில் புதிய பயணிகள் செல்லும் போது வழி தவறி கிணற்றில் விழும் அபாயம் அதிகமாக உள்ளது.


உயிர்சேதம் ஏற்படும் முன்னர், மாவட்ட நிர்வாகம் உடனடி பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்து, தடுப்பு சுவர் அமைத்து எச்சரிக்கை பலகைகள் வைக்க வேண்டும் என பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர். 

கருத்துகள் இல்லை:

Post Top Ad