பாலக்கோடு தாசில்தார் அலுவலகத்தில் ஜமாபந்தி முகாம் – பொதுமக்களிடமிருந்து பல மனுக்கள் பெறப்பட்டது. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 20 மே, 2025

பாலக்கோடு தாசில்தார் அலுவலகத்தில் ஜமாபந்தி முகாம் – பொதுமக்களிடமிருந்து பல மனுக்கள் பெறப்பட்டது.


பாலக்கோடு, மே 20:

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு தாசில்தார் அலுவலகத்தில் புலிக்கரை பஞ்சாயத்திற்கு உட்பட்ட பசலி 1434ஆம் வருஷத்திற்கான வருவாய் தீர்வாயம் மற்றும் ஜமாபந்தி நிகழ்ச்சி கோட்டாட்சியர் காயத்திரியின் தலைமையில் நடைபெற்றது.

நிகழ்வின் போது, பொதுமக்களிடமிருந்து பல கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. ஒவ்வொரு மனுவின் நிலை குறித்தும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கேட்டு, உரிய நடவடிக்கைகள் எடுக்க கோட்டாட்சியர் அறிவுறுத்தினார். மேலும், கிராம நிர்வாக அலுவலர்கள் பராமரித்து வரும் பதிவேடுகள், நில அளவுத் துறையின் உபகரணங்கள், மற்றும் வருவாய் ஆவணங்களை ஆய்வு செய்தார்.


இந்த முகாமில் பாலக்கோடு தாசில்தார் ரஜினி, துணை தாசில்தார் ஜெகதீசன், கிராம நிர்வாக அலுவலர்கள் சாம்ராஜ், மாதேஷ், வட்ட வழங்கல் அலுவலர், நில அளவையர்கள், வருவாய் ஆய்வாளர்கள் மற்றும் பிற துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர். 

கருத்துகள் இல்லை:

Post Top Ad