தருமபுரி மாவட்டத்தில் ஜமாபந்தி – மே 20 முதல் 23 வரை நடைபெறும் - மாவட்ட ஆட்சியர் தகவல். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 15 மே, 2025

தருமபுரி மாவட்டத்தில் ஜமாபந்தி – மே 20 முதல் 23 வரை நடைபெறும் - மாவட்ட ஆட்சியர் தகவல்.


தருமபுரி, மே 15:

தருமபுரி மாவட்டத்தில் 1434ஆம் பசலி ஆண்டுக்கான வருவாய்த் தீர்வாயம் (ஜமாபந்தி) நிகழ்ச்சிகள் மே 20, 21, 22 மற்றும் 23 – 2025 ஆகிய நாட்களில் வட்டம் வாரியாக நடைபெறவுள்ளன என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார். ஜமாபந்தி நடைபெறும் நாட்கள், இடங்கள் மற்றும் அதற்குப் பொறுப்பான அதிகாரிகள் விவரம்:

🔹 அரூர் வட்டம்
இடங்கள்: அரூர் (20.05.2025), மொரப்பூர் (21.05.2025), தீர்த்தமலை (22 & 23.05.2025)
அதிகாரி: மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப.


🔹 நல்லம்பள்ளி வட்டம்
இடங்கள்: நல்லம்பள்ளி (20.05.2025), பாளையம் (21.05.2025), இண்டூர் (23.05.2025)
அதிகாரி: மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி இரா. கவிதா


🔹 பாலக்கோடு வட்டம்
இடங்கள்: புலிக்கரை (20.05.2025), பாலக்கோடு (21.05.2025), மாரண்டஅள்ளி (22.05.2025), வெள்ளிச்சந்தை (23.05.2025)
அதிகாரி: தருமபுரி வருவாய் கோட்ட அலுவலர் திருமதி இரா. காயத்ரி


🔹 பாப்பிரெட்டிப்பட்டி வட்டம்
இடங்கள்: பாப்பிரெட்டிப்பட்டி (20.05.2025), பொம்மிடி (21.05.2025), கடத்தூர் (22.05.2025), தேன்கரைக்கோட்டை (23.05.2025)
அதிகாரி: அரூர் வருவாய் கோட்ட அலுவலர் திரு. வெ. சின்னுசாமி


🔹 காரிமங்கலம் வட்டம்
இடங்கள்: காரிமங்கலம் (20.05.2025), கம்பைநல்லூர் (21.05.2025), பெரியானஅள்ளி (22.05.2025)
அதிகாரி: தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி.) திரு. த. சுப்ரமணியன்


🔹 தருமபுரி வட்டம்
இடங்கள்: தருமபுரி (20.05.2025), கிருஷ்ணாபுரம் (21.05.2025)
அதிகாரி: மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் திருமதி வி. தேன்மொழி


🔹 பென்னாகரம் வட்டம்
இடங்கள்: பென்னாகரம் (20.05.2025), பெரும்பாலை (21.05.2025), சுஞ்சல்நத்தம் (22.05.2025), பாப்பாரப்பட்டி (23.05.2025)
அதிகாரி: உதவி ஆணையர் (ஆயம்) திருமதி செ. நர்மதா


ஜமாபந்தி நடைபெறும் நாட்களில் முற்பகலில் பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெறப்படும். நில உரிமை, பட்டா மாறுதல், பெயர் திருத்தம், பரப்பு திருத்தம், உட்பிரிவு பிரச்சனைகள் உள்ளிட்ட அனைத்து குறைகள் தொடர்பாக உரிய ஆவணங்களுடன் மனுக்களை வழங்கி, தங்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு காண பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 

கருத்துகள் இல்லை:

Post Top Ad