முட்டையிலிருந்து தயாரிக்கும் மையோனைசுக்கு ஓராண்டு தடை – தமிழக அரசின் உத்தரவு. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 2 மே, 2025

முட்டையிலிருந்து தயாரிக்கும் மையோனைசுக்கு ஓராண்டு தடை – தமிழக அரசின் உத்தரவு.


தர்மபுரி:
முட்டையிலிருந்து தயாரிக்கப்படும் மையோனைசு தயாரிப்பு மற்றும் விற்பனைக்கு தமிழக அரசு ஏப்ரல் 8, 2025 முதல் ஒரு ஆண்டு காலத்துக்கு தடை விதித்து அரசிதழ் மூலம் உத்தரவிட்டுள்ளது (அரசிதழ் எண்: 161). 
தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களால் — சால்மோனெல்லா, எஸ்கெரிச்சியா கோலி, லிஸ்டீரியா மொனோசைட்டோஜெனஸ் போன்றவை — முட்டை சார்ந்த மையோனைஸில் பெரிதும் மாசுபடும் அபாயம் இருப்பதால், இந்தத் தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இவை உணவுகளில் சேரும்போது, ஆரோக்கியத்துக்கு பெரிய ஆபத்தை ஏற்படுத்தக்கூடியவை எனவும், சிலர் மீது தீவிர ஒவ்வாமையும் ஏற்படுத்தக்கூடும் எனவும் உணவு பாதுகாப்புத்துறை அறிவுறுத்தியுள்ளது.


அரேபிய உணவுகள் (ஷவர்மா, தந்தூரி, பார்பிகியூ), வறுக்கப்பட்ட சிப்ஸ்கள், பிரென்ச் பிரைஸ் போன்றவைகளில் மையோனைஸ் முக்கிய சேர்க்கையாக இருப்பது குறிப்பிடத்தக்கது. இதனால் இளம் தலைமுறையின் சுகாதாரத்தைக் கவனித்துத் தானே இந்தத் தடை அறிவிக்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.

  1. உணவகங்கள், கேட்டரிங் சேவைகள், சில்லறை விற்பனையாளர்கள் உள்ளிட்ட அனைத்து உணவு வியாபாரிகளும், மூல முட்டை அடிப்படையிலான மையோனைஸின் தயாரிப்பு, விற்பனை, விநியோகம் ஆகியவற்றை உடனடியாக நிறுத்த வேண்டும்.
  2. விதிமீறினால் அபராதம், உரிமம் ரத்து, சட்ட நடவடிக்கை போன்ற கடுமையான தண்டனைகள் எதிர்பார்க்கலாம்.
  3. நுகர்வோர், மையோனைஸ் அல்லது அதனுடன் தொடர்புடைய பொருட்களை வாங்கும் போது எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்.

தருமபுரி மாவட்டத்தில், உணவுப் பாதுகாப்புத் துறை கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. தடை செய்யபட்ட மையோனைஸ் பயன்படுத்தும் உணவகங்கள் மீது தடுப்பூசி நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப. தெரிவித்துள்ளார். 

கருத்துகள் இல்லை:

Post Top Ad