ஆய்வு நேரத்தில், தீப்பெட்டி தொழிற்சாலைகளில் முதலுதவிப் பெட்டி, தண்ணீர் வாளிகள், மணல்வாளிகள் மற்றும் தீத்தடுப்பு சாதனங்கள் போன்ற முக்கிய பாதுகாப்பு சாதனங்கள் முறையாக பராமரிக்கப்படுவதை, விபத்து தடுப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளதை உறுதிப்படுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுறுத்தினார். இந்த தொழிற்சாலைகளில் பணி செய்யும் தொழிலாளர்களுக்கு ESI பணி பாதுகாப்பு பெற்றிருப்பதும், தொழிற்சாலைகளில் அனுமதிக்கப்பட்ட அளவிற்கு மேல் இராசாயனங்களைப் பயன்படுத்தாததை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
மேலும், தீப்பெட்டி தயாரிக்கும் தொழிற்சாலைகளில் கழிவுகள் மற்றும் இராசாயனங்களின் பராமரிப்பை முறையாக செய்ய வேண்டும் என, அவற்றை தீக்குச்சி மற்றும் தீப்பெட்டி தயாரிக்கும் போது சரியான முறையில் கையாள வேண்டும் என அவர் கூறினார். இதன் தொடர்ச்சியாக, தயாரிக்கப்பட்ட தீப்பெட்டிகளை பாதுகாப்பான முறையில் அடுக்கி வைக்கும் அறைகள் (Fire-proof wall) அமைக்கப்பட வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.
பட்டாசு கடைகள் மற்றும் வெடிமருந்து குடோன்கள் குறித்தும், அவற்றின் உரிமையாளர்கள் உரிமத்தில் அனுமதிக்கப்பட்ட அளவிற்கு தயாரித்து, விற்பனை செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது. கடைகளில் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள் பயன்படுத்த வேண்டாம் எனவும், மின்சாரம் மற்றும் இணைப்புகள் பாதுகாப்பான முறையில் அமைக்கப்பட வேண்டும் என்றும் அவர் எச்சரித்தார். இதில், தேவையான தீத்தடுப்பு சாதனங்கள், முதலுதவிப் பெட்டி மற்றும் பிற பாதுகாப்பு சாதனங்கள் கையாளப்பட வேண்டும் எனவும், அலுவலர்கள் மேற்கொள்ளும் ஆய்வுகளில் காவல்துறையினருடன் இணைந்து நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.
அத்துடன், ஆய்வின் போது, இருப்புப் பதிவேட்டில் உள்ள பட்டாசு மற்றும் வெடிமருந்தின் இருப்பு, உரிமம் வழங்கப்பட்ட அளவிலான விற்பனை மற்றும் பாதுகாப்பு முறைகள் கடைப்பிடிக்கப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும் என்று சதீஸ் அவர்கள் தெரிவித்தார்.
மேலும், ஆய்வு பயணத்தின் போது, நெசவாளர் காலனியில் உள்ள முதல்வர் மருந்தகத்தில் மருந்துகளின் விவரங்கள் மற்றும் தேவையான அளவு இருப்பு குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது. இந்த நிகழ்வில், தருமபுரி வட்டாட்சியர் திரு. சண்முகசுந்தரம் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர். மாவட்ட கட்டுப்பாட்டு அறை மூலம் 1077, 8903891077, 18004257016, 18004251071 என்ற தொலைபேசி எண்களில் புகார்கள் தெரிவிக்கலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக