தருமபுரி, மே 20:
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டத்தில், தனிப்பட்ட தகராறில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் ஏற்பட்டது. இது பகுதியினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. கௌரிசெட்டிப்பட்டி அருகே உள்ள ஊனம் பள்ளம் கிராமத்தைச் சேர்ந்தவர் கஜேந்திரன் (வயது 36 - படத்தில் உள்ளவர்). இவர் ஓசூர் அருகேயுள்ள ஒரு கல் குவாரியில் கம்ப்ரசர் வாகன ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இதே பகுதியைச் சேர்ந்த நஞ்சப்பன் (45) என்பவருக்கும் கஜேந்திரனுக்கும், கடந்த சில ஆண்டுகளாக சொந்தப் பிரச்சினைகள் மற்றும் தனிப்பட்ட முரண்பாடுகள் இருந்ததாக தெரிய வந்துள்ளது.
திங்கட்கிழமை காலை, இருவரும் ஊருக்குள் சந்தித்தபோது, இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டு, அது கைகலப்பாக மாறியது. இதில், ஆயுதம் கொண்டு தாக்கியதில் நஞ்சப்பன் படுகாயம் அடைந்து, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் கிடைத்தவுடன் பாப்பாரப்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்குச் சென்று, உடலை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். சம்பவத்தில் தொடர்புடையதாகக் கூறப்படும் கஜேந்திரனை கைது செய்து, போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக