பாலக்கோடு அண்ணா ஊராட்சி ஒன்றிய பள்ளியில் அரிமா சங்கம் நடத்திய இலவச கண் சிகிச்சை முகாம். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 18 மே, 2025

பாலக்கோடு அண்ணா ஊராட்சி ஒன்றிய பள்ளியில் அரிமா சங்கம் நடத்திய இலவச கண் சிகிச்சை முகாம்.

பாலக்கோடு, மே 18 –

தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அண்ணா ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில், அரிமா சங்கம் மற்றும் கோவை அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து இலவச கண் சிகிச்சை முகாமை ஏற்பாடு செய்திருந்தது. முகாம் அரிமா சங்க தலைவர் திரு. கேசவராஜ் தலைமையில் நடைபெற்றது. சங்க செயலாளர்கள் கிரிதர், சக்திவேல் மற்றும் பொருளாளர் பி.என்.பி. முத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமினை தொழிலதிபர்கள் எஸ்.எஸ்.எல். பாலாஜி, கணேசன் மற்றும் அரிமா பாலாஜி ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தனர்.

இம்முகாமில் கண்புரை, கண் நீர் அழுத்தநோய், கருவிழி பாதிப்பு, மாலைக்கண் நோய், சர்க்கரை நோயால் ஏற்படும் விழித்திரை மாற்றங்கள், தூரப்பார்வை, நெருங்கிய பார்வை குறைபாடுகள், கண்களில் தானாக நீர் வடிதல், உள்விழி நிலை மாற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு கண் சிக்கல்களுக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. பாலக்கோடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து 300க்கும் மேற்பட்ட பொதுமக்கள் முகாமில் கலந்து கொண்டு பரிசோதனை செய்துகொண்டனர். இதில் 112 நபர்கள் கண்புரை மற்றும் கண் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் என கண்டறியப்பட்டு, அவர்களுக்கு கோவை அரவிந்த் கண் மருத்துவமனையில் இலவச அறுவை சிகிச்சை செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.


முகாமில் அரிமா சங்க நிர்வாகிகள் ராஜாமணி, பச்சியப்பன், பத்ரிநாத், சிவாஜி, முருகன் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர் சண்முகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த முகாம் பொதுமக்களின் பாராட்டைப் பெற்றதுடன், கண் ஆரோக்கியத்திற்கான விழிப்புணர்வையும் ஏற்படுத்தியது. 

கருத்துகள் இல்லை:

Post Top Ad