தருமபுரி, மே 15:
தருமபுரி மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறை அலுவகத்தில் பயன்பாட்டில் இருந்த TN09 BG 2345 என்ற எண்ணுடைய Bolero LX வகை வாகனம், தற்போது கழிவுபொருளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வாகனத்தின் மதிப்பு ரூ.1,25,000/- என தொழில்நுட்ப வல்லுநர்கள் குழுவினரால் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், மே 22, 2025 வியாழக்கிழமை காலை 11.00 மணிக்கு, தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இந்த வாகனம் பொது ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட உள்ளது. ஏலத்தில் கலந்துகொள்ள விருப்பமுள்ளவர்கள் நேரில் வந்து விலைப்புள்ளியை கோரலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து செய்தி மக்கள் தொடர்புத்துறை அலுவலர் திரு. வெ. லோகநாதன் அவர்கள் அறிவிப்பில் கூறியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக