தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அரசு புறம்போக்கு நிலங்களில் வசிக்கும் மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கக் கோரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வட்டாட்சியர் அலுவலகங்கள் முன்பு தொடர்ந்து போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக நேற்று பென்னாகரம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு சுமார் 500க்கும் மேற்பட்ட கட்சி உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள், அரசு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் எனக் கோரியவர்கள், மனுக்களுடன் பங்கேற்றனர்.
போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள், பென்னாகரம் பகுதியில் மட்டும் சுமார் 1750 நபர்களுக்கு இதுவரை வீட்டுமனை பட்டா வழங்கப்படவில்லை எனவும், அரசுப் புறம்போக்கு நிலங்களில் வாழும் ஏழை மக்களுக்கு உடனடியாக இலவச பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் பதிலளிக்க வேண்டுமென்றும், தேவையான ஆவணங்களை வழங்கியவர்களுக்கு பட்டா வழங்க திட்டமிட்ட காலக்கெடுவில் தீர்வு காண வேண்டும் எனவும் போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.
— தமிழக குரல் செய்தியாளர், பென்னாகரம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக