செட்டிகரையில் ரூ.23 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்ட நேரு யுவ கேந்திரா புதிய அலுவலகத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் திறந்து வைத்தார். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 1 மே, 2025

செட்டிகரையில் ரூ.23 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்ட நேரு யுவ கேந்திரா புதிய அலுவலகத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் திறந்து வைத்தார்.


தருமபுரி, மே 1, 2025

தருமபுரி மாவட்டம் செட்டிகரையில் ரூ.23.00 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட நேரு யுவ கேந்திரா (NYK) புதிய மாவட்ட அலுவலக கட்டிடத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு ரெ. சதீஷ், இ.ஆ.ப., அவர்கள் இன்று (01.05.2025) திறந்து வைத்து சிறப்புரையாற்றினார்.


திறப்புவிழா நிகழ்வின் போது ஆட்சித்தலைவர் உரையில் கூறியதாவது:

"நேரு யுவா கேந்திரா என்பது ஒரு திட்டம் அல்ல, இது ஒரு இயக்கம். இளைஞர்கள் சமூகத்தில் நல்ல மாற்றங்களை உருவாக்கும் அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்படும் இயக்கம். சுவாமி விவேகானந்தர் கூறியது போல், 100 பொறுப்புள்ள இளைஞர்களால் ஒரு புதிய இந்தியா உருவாக்கமுடியும். தருமபுரி மாவட்டத்திலேயே தற்போது 6000-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் இந்த இயக்கத்தில் பணியாற்றுகின்றனர்.
இவர்கள் மூலமாக தருமபுரியை பசுமையான, முன்னேற்றம் வாய்ந்த மாவட்டமாக மாற்ற மாவட்ட நிர்வாகம் முழு ஒத்துழைப்பையும் வழங்க தயாராக உள்ளது. உங்கள் திறமை மற்றும் சேவைக்கு தேவையான பயிற்சிகள் வழங்கப்படும்."


இந்நிகழ்ச்சியில் தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் திரு. ஆ. மணி, பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் திரு. ஆ. கோவிந்தசாமி, மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி ஆர். கவிதா, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநில NYK இயக்குநர் திரு. செந்தில்குமார், தருமபுரி துணை இயக்குநர் திரு. டிராவீன் சார்லஸ்டன், மாவட்ட அலுவலர் திரு. அப்துல் காதர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


மேலும், நேரு யுவா கேந்திரா இளைஞர் மன்றங்களை ஊக்குவிக்கும் வகையில் மாவட்ட ஆட்சித்தலைவர் விளையாட்டு உபகரணங்களை வழங்கினார். நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் இதில் பங்கேற்று விழாவை சிறப்பித்தனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad