பாலக்கோடு கடமடை கிராமத்தில் சத்துணவு பணியாளர்கள் ஒன்றிய பொதுக்குழு கூட்டம் – முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 2 மே, 2025

பாலக்கோடு கடமடை கிராமத்தில் சத்துணவு பணியாளர்கள் ஒன்றிய பொதுக்குழு கூட்டம் – முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்.


தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே உள்ள கடமடை கிராமத்தில் தமிழ்நாடு சத்துணவு பணியாளர்கள் ஒன்றியத்தின் பாலக்கோடு ஒன்றிய பொதுக்குழு கூட்டம் வெகுவிமரிசையாக நடைபெற்றது.


ஒன்றிய தலைவர் பூங்கொடி தலைமையில் நடந்த இக்கூட்டத்தில், மாவட்ட செயலாளர் ஜெயந்தி, மாவட்ட பிரச்சார செயலாளர் மாது, மற்றும் மாவட்ட இணைச் செயலாளர் செந்தாமரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய பொருளாளர் அமுதா வரவேற்புரை வழங்கினார். கூட்டத்தை மாவட்ட தலைவர் அண்ணாதுரை துவக்கி வைத்து உரையாற்றினார். மாநில துணைத்தலைவர் முனிரத்தினம் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு உரையாற்றினார்.


இக்கூட்டத்தில் பின்வரும் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன:

  • 42 ஆண்டுகளாக சேவையில் ஈடுபட்டு வரும் சத்துணவு பணியாளர்களுக்கு பணிநிரந்தரம் வழங்கப்பட வேண்டும்.

  • ஓய்வு பெற்ற சத்துணவு பணியாளர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7,850 வழங்க வேண்டும்.

  • சத்துணவு அமைப்பாளர்கள் சமையல்களுக்கு விருப்ப பணி மாறுதல் வழங்கப்பட வேண்டும்.


இந்த கூட்டத்தில் மாவட்ட பொருளாளர் மாதம்மாள், ஒன்றிய தலைவர்கள் தங்கம், சரிதா, அகிலா, மற்றும் ஒன்றிய செயலாளர் சுமதி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். முடிவில், ஒன்றிய மகளிர் அணி தலைவி கிருஷ்ணவேணி நன்றி கூறினார். 

கருத்துகள் இல்லை:

Post Top Ad