தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே உள்ள பூகானஹள்ளி ஊராட்சியின் எண்டபட்டியில் அமைந்துள்ள ஊராட்சி அலுவலக முன்பு, தொழிலாளர் தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. ஊராட்சி செயலாளர் சாமராஜ் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், கிராமத்தின் வரவு-செலவு கணக்குகள் வாசிக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து ஊராட்சியில் நடந்து வரும் பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
கூட்டத்தில் பங்கேற்ற கிராம மக்கள், தங்களது பகுதிகளில் நிலவும் முக்கிய பிரச்சனைகளை தூக்கி வைத்தனர்:
-
பனங்கள்ளி பகுதியில், மினி டேங்க் மின்சாரத்தில் அடிக்கடி தடை ஏற்படுவதால், குடிநீருக்காக மக்கள் கடும் அவலமடைகின்றனர். மின்சார மோட்டாரை சரிசெய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.
-
மேல் மற்றும் கீழ் எண்டபட்டி பகுதிகளில், ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் முறையாக இயங்கவில்லை. குடிநீர் குழாய்கள் உடைந்த நிலையில் உள்ளதால் அவற்றை உடனடியாக பழுது பார்க்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்த விவகாரத்தில், மேற்பார்வையாளர் மலர்விழி பஞ்சாயத்துக்கு நிதியில்லையென்று கூறியதையடுத்து, மக்கள் ஆத்திரத்தில் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் அதிகாரிகளிடம் விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.
மேலும், பனங்கள்ளி பகுதியில் 20 ஆண்டுகளுக்கு முன்னர் ஆதிதிராவிடர் மக்களுக்கு கட்டி வழங்கப்பட்ட ஓட்டு வீடுகள் தற்போது மிகவும் பழுதடைந்து, இடிந்து விழும் அபாயத்தில் உள்ளன. அவற்றை பழுது பார்க்கும் ரிப்பேரிங் பணிக்கு ஒப்பந்தம் வழங்க வேண்டும் என கூட்டத்தில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் ஒன்றிய மேற்பார்வையாளர், கிராம நிர்வாக அலுவலர் ரவி, தோட்டக்கலை மற்றும் மருத்துவத்துறை அதிகாரிகள், கிராம மக்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக