தர்மபுரி, மே 22:
தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், மாரண்டஅள்ளி காவல்நிலைய போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். இந்த நடவடிக்கையில், இன்ஸ்பெக்டர் கப்ரமணி தலைமையில் போலீசார் சோதனை மேற்கொண்ட போது, சந்தேகத்திற்கிடமான முறையில் பயணித்த ஒரு மோட்டார் சைக்கிளை மாறண்டஅள்ளி நான்கு ரோட்டில் நிறுத்தி சோதனை செய்தனர்.
சோதனைச் சமயத்தில், அந்த மோட்டார் சைக்கிளின் பெட்ரோல் டேங்க் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் பையில் 1.5 கிலோ (1500 கிராம்) கஞ்சா இருப்பது கண்டறியப்பட்டது. இதனை தொடர்ந்து கைது செய்யப்பட்டவர், கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிகோட்டை அருகே உள்ள சாத்தன்கல் கிராமத்தை சேர்ந்த சின்ராஜ் (42) என்பது விசாரணையில் தெரிய வந்தது. அவர் இதற்கு முன்பும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்ததும் போலீசாருக்கு உறுதி செய்யப்பட்டது.
காவல் துறையினர் அவரை கைது செய்து, அவரது மோட்டார் சைக்கிளுடன் சேர்த்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர். பின்னர், சின்ராஜ் மீது வழக்குப் பதிவு செய்து தர்மபுரி சிறையில் அடைத்தனர். காவல்துறையினர் தொடர்ந்து இவ்வகை மயக்குவாத பொருட்கள் வர்த்தகத்தில் ஈடுபடும் நபர்களைக் கண்காணித்து நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக