பாலக்கோடு, மே 22-
தமிழக அரசின் மக்களுக்கு நெருக்கமாக மருத்துவ சேவையை வழங்கும் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ், தர்மபுரி மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் மற்றும் வட்டார மருத்துவ அலுவலரின் அறிவுறுத்தலின் பேரில் பொ. மல்லபுரம் பேரூராட்சி பழைய ஒட்டுப்பட்டி கிராமத்தில் இலவச சித்தா மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. பொ. மல்லபுரம் ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் நடைபெற்ற இந்த முகாமில், ஆயுஷ் மருத்துவ அலுவலர் மருத்துவர் சுகுணா தேவி, உதவி மருத்துவ அலுவலர் கு. தினகரன், உதவிப் பணியாளர் காவியா ஆகியோர் பொதுமக்களுக்கு சித்த மருத்துவ ஆலோசனைகள் மற்றும் சிகிச்சைகளை வழங்கினர்.
இந்த முகாமில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்று பலனடைந்தனர். பொதுமக்கள் நலனில் சித்த மருத்துவத்தின் பங்கும், அதன் பயனும் குறித்த விழிப்புணர்வும் இம்மூலம் அதிகரிக்கப்பட்டது. நிகழ்வில் இப்பகுதியைச் சேர்ந்த கவுன்சிலர் விஜயலட்சுமி, ஊர் கவுண்டர் குணசேகரன், முன்னாள் கவுன்சிலர் துரைராஜ், சுந்தர்ராஜன் உள்ளிட்ட ஊர் முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக