மாரண்டஅள்ளி, மே 17:
தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே உள்ள 5-வது மைல் பகுதியில் கஞ்சா விற்ற குற்றச்சாட்டில் கூலி தொழிலாளி ஒருவர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். மாரண்டஅள்ளி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு இரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து, மாரண்டஅள்ளி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது 5-வது மைல் கிராமத்தில் உள்ள பேருந்து நிறுத்தம் அருகே பாலிதின் மூடியுடன் ஒருவர் சந்தேகத்திற்கிடமான வகையில் நின்று கொண்டிருந்தார். போலீசாரை பார்த்ததும் தப்பிச் செல்ல முயன்ற அவரை போலீசார் துரத்தி பிடித்தனர்.
விசாரணையில், அவர் சீரியம்பட்டி அருகே உள்ள முனுசாமி கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்த முருகேசன் (வயது 33) என்பதும், கூலி தொழிலாளியாக இருந்த அவர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. தொடர்ந்து முருகேசனை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து 100 கிராம் கஞ்சா மற்றும் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக