தருமபுரி மாவட்டம், கடத்தூரில் செயல்பட்டு வரும் அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் 2025-26 கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை தொடங்கியுள்ளது. இந்த சேர்க்கை நேரடி முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு பட்டயப்படிப்புகளுக்காக நடைபெறுகிறது.
இக்கல்லூரியில் சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், கம்பியூட்டர் என்ஜினியரிங் மற்றும் உற்பத்தி தொழில்நுட்பம் (DMT) உள்ளிட்ட துறைகளில் பட்டயப் பயிற்சி வழங்கப்படுகிறது. முதலாமாண்டு பட்டய படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் குறைந்தது 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். நேரடி இரண்டாமாண்டு சேர்க்கைக்காக பிளஸ்-2 தேர்ச்சி பெற்றவர்கள் (எந்த பாடப்பிரிவும் சம்பந்தம் இல்லாமல்) அல்லது 10-ம் வகுப்பு முடித்த பின் 2 ஆண்டுகள் ஐ.டி.ஐ. முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பதாரர்கள் www.tnpoly.in இணையதளம் வாயிலாகவும், நேரிலாகக் கல்லூரியிலும் விண்ணப்பிக்கலாம். இக்கல்லூரியில் நவீன வசதிகளுடன் கூடிய ஆய்வகங்கள், தனி விடுதிகள், குறைந்த கல்விக் கட்டணம், அரசு உதவித் தொகைகள், வேலை வாய்ப்பு உதவிகள் உள்ளிட்ட பல்வேறு சிறப்பம்சங்கள் உள்ளன. மேலும் விவரங்களுக்கு முதல்வர் 500008791 மற்றும் 9080139880, 8508168390, 7338900733, 04346-265355 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம். மாணவ, மாணவியர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு விரைந்து விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக