தருமபுரி, மே 24 –
இந்த மாபெரும் விழாவுக்கு மாவட்ட ஆட்சியர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., தலைமையேற்று, ஜல்லிக்கட்டு உறுதிமொழியை ஏற்று, கொடியசைத்து விழாவை தொடங்கி வைத்தார். பிறகு, வீரர்கள் மற்றும் விழாக் குழுவினருடன் இணைந்து “பாரம்பரியத்தை பேணிக் காப்போம்; எந்த ஊறும் செய்யமாட்டோம்; விதிமுறைகளைப் பின்பற்றுவோம்” என உறுதிமொழியை வாசித்து எடுத்துக்கொண்டார்.
இவ்விழாவில் சுமார் 450 காளைகள் மற்றும் 600 மாடுபிடி வீரர்கள் பங்கேற்று தங்கள் வீரத்தையும் தைரியத்தையும் வெளிப்படுத்தினர். பரிசுகள் வழங்கும் விழாவில், சிறந்த காளைகளுக்கும், பல காளைகளை அடக்கிய சிறந்த மாடுபிடி வீரர்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டன.
விழாவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ்.எஸ். மகேஸ்வரன், வருவாய் கோட்டாட்சியர் திருமதி இரா. காயத்ரி, கால்நடை பராமரிப்பு துறை மண்டல இணை இயக்குநர் மரு. பெ. கோவிந்தராசு, இணை இயக்குநர் (மருத்துவம்) மரு. சாந்தி, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் திரு. சிவகுமார் மற்றும் பல்வேறு அரசுத் துறை அலுவலர்கள், ஜல்லிக்கட்டு விழா குழுவினர், காளையுடையோர், வீரர்கள், பொதுமக்கள் என பெருமளவில் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர்.
இந்நிகழ்ச்சி பாரம்பரிய கலாச்சாரத்தின் தாக்கத்தை மீண்டும் ஒருமுறை மக்கள் மனங்களில் பதியச் செய்தது. மாநில அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்த வகையில் எந்தவிதமான குறைபாடும் இல்லாமல் விழா வெற்றிகரமாக முடிவடைந்தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக